சரக்குகளை ஏற்றிச் செல்லும் ஒரு கப்பல் சூயஸ் கால்வாயில் சிக்கி கொண்டதால் உலக வர்த்தகம் பாதிக்கப் பட்டுள்ளது.
ஐரோப்பாவையும் ஆசியாவையும் இணைக்கும் இந்த சூயஸ் கால்வாயானது 193 கி.மீ. நீளமான ஒரு நீர்வழிப் பாதையாகும்.
எகிப்தில் அமைந்துள்ள செயற்கையாக அமைக்கப்பட்ட இந்த கடல்மட்ட நீர்வழிப் பாதையானது மத்தியத் தரைக் கடலையும் செங்கடலையும் இணைக்கும் வகையில் 1859 மற்றும் 1869 ஆகிய ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலகட்டத்தில் அமைக்கப் பட்டது.
இந்தக் கால்வாயானது உலகின் பரபரப்பான நீர்வழிப்பாதைகளில் ஒன்றாகும்.
மார்ச் 23 அன்று வானிலையில் ஏற்பட்ட சில மாற்றங்களால் MV EverGiven எனப்படும் ஒரு பெரிய சரக்குக் கப்பலானது சூயஸ் கால்வாயின் ஒரு குறுகிய பகுதியில் சிக்கிக் கொண்டது.
இது சீனாவிலிருந்து நெதர்லாந்திற்குச் சென்று கொண்டு இருந்தது.
இந்தச் சிக்கலிற்குப் பிறகு சில நாடுகள் எண்ணெய்யின் விலை உயர்வைச் சந்தித்து இருக்கின்றன.
அரசியல், நிதி மற்றும் தொழில்நுட்பப் பிரச்சினைகளால் இதற்கு முன்பு ஐந்து முறை அந்த சூயஸ் கால்வாய் மூடப் பட்டுள்ளது.
தற்போது கிட்டத்தட்ட ஒரு வாரமாக சூயஸ் கால்வாயை மறித்த எவர் கிவன் என்ற அந்தக் கப்பலானது இந்தக் கால்வாயின் கரையோரத்திலிருந்துச் சமீபத்தில் விடுவிக்கப் பட்டுள்ளது.