சூரியகாந்தி மற்றும் சோயா எண்ணெய் மீதான இறக்குமதி வரி
May 27 , 2022 1093 days 489 0
இந்த ஆண்டு மற்றும் 2023-24 ஆம் ஆண்டில் கச்சா சோயா எண்ணெய் மற்றும் கச்சா சூரியகாந்தி எண்ணெய் ஆகியவற்றினைத் தலா 20 லட்சம் மெட்ரிக் டன்கள் வரையில் வரியில்லாமல் இறக்குமதி செய்வதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது.
முன்னதாக, அக்டோபர் மாதத்தில், சமையல் எண்ணெய்களின் விலைகள் உச்ச கட்டமாக இருந்த சமயத்தில் அவற்றின் மீதான அடிப்படை இறக்குமதி வரிகளை அரசாங்கம் குறைத்தது.
கச்சா பாமாயில் மீதான இறக்குமதி வரியானது 10 சதவீதத்தில் இருந்து 2.5% ஆக குறைக்கப் பட்டுள்ளது.
கச்சா சோயா மற்றும் சூரியகாந்தி எண்ணெய் மீதான வரி 7.5 சதவீதத்தில் இருந்து 2.5% ஆக குறைக்கப் பட்டது.