சூரியக் குடும்பத்திற்கும் விண்மீன் இடைவெளிக்கும் இடையேயான எல்லை
June 21 , 2021 1505 days 626 0
அறிவியலாளர்கள் நமது சூரியக் குடும்பத்திற்கும் அயனிச் செறிவு மண்டலம் எனப் படும் விண்மீன் இடைவெளிக்கும் இடையேயான எல்லையின் முதலாவது முப்பரிமாண வரைபடத்தினை உருவாக்கியுள்ளனர்.
இந்த முப்பரிமாண வரைபடமானது நாசாவின் IBEX என்ற செயற்கைக் கோளின் தரவுகளைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது.
அயனிச் செறிவு மண்டலத்தின் எல்லையானது முதல்முறையாக வரைபடமிடப் பட்டு உள்ளது.
இது சூரியக் காற்றும் விண்மீன் இடைவெளிப் பகுதிக் காற்றும் எவ்வாறு தொடர்பு கொள்கின்றன என்பதை அறிய அறிவியலாளர்களுக்கு உதவும்.
இதற்கு முன்பாக இந்த எல்லையானது இயற்பியல் மாதிரிகளின் தேற்றங்களில் குறிப்பிடப் பட்டுள்ளது.
அறிவியலாளர்கள் இதனை அளவிட்டு ஒரு முப்பரிமாண வரைடமாக உருவாக்கியது இதுவே முதல்முறையாகும்.