சூரியனின் துருவங்களின் முதலாவது படங்களை எடுப்பதற்கான திட்டம்
February 3 , 2020 2103 days 770 0
நாசாவும் ஐரோப்பிய விண்வெளி நிறுவனமும் இணைந்து சூரியனின் வடக்கு மற்றும் தெற்குத் துருவங்களின் முதலாவது படங்களை எடுப்பதற்காக ஒரு புதிய விண்கலத்தைச் செலுத்த இருக்கின்றன.
இதற்கு “சூரியன் சுற்றுவட்டப் பாதை விண்கலம்” என்று பெயரிடப் பட்டுள்ளது.
இந்த விண்கலமானது வெள்ளி மற்றும் பூமியின் ஈர்ப்பைப் பயன்படுத்த இருக்கின்றது. இது சூரியனின் துருவங்களின் புகைப்படத்தை எடுப்பதற்காக சூரியனின் சுற்று வட்டப் பாதையிலிருந்துத் தன்னைச் சுழற்றுகின்றது.