சூரியனின் துருவப் பகுதியை ஆராய்வதற்கான ஆய்வு – நாசா
February 13 , 2020 1968 days 832 0
அமெரிக்காவின் நாசா மற்றும் ESA (ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் - European Space Agency) ஆகியவை சூரியனின் துருவப் பகுதிகளை ஆராய்வதற்காக சூரியனுக்கு விண்கலன்களை அனுப்பியுள்ளன.
இந்த சூரிய சுற்று வட்டப்பாதை விண்கலமானது 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி 9 அன்று ஏவப்பட்டது.
இந்த ஆய்வு விண்கலமானது பூமி மற்றும் வெள்ளி ஆகியவற்றின் ஈர்ப்பு விசையைப் பயன்படுத்தி சூரியனில் இருந்து 26 மில்லியன் மைல் தொலைவில் தன்னை நிலை நிறுத்துகின்றது.
இந்த ஆய்வானது முதல்முறையாக சூரியனின் துருவங்களை ஆராய இருக்கின்றது.
இது சூரியக் காற்றைக் கண்காணிக்க விஞ்ஞானிகளுக்கு உதவ இருக்கின்றது.
சூரியக் காற்றானது சூரியனின் மேல் வளிமண்டலத்திலிருந்து வெளியேறுகின்றது.