மத்திய சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறை அமைச்சகம் நாடெங்கிலும் 50 சூரிய ஒளி சர்க்கா குழுக்களை செயல்படுத்துதலுக்காக ரூ.550 கோடி மதிப்பில் சூரிய ஒளி சர்க்கா என்ற ஒரு திட்டத்தைத் தொடங்கியுள்ளது.
சூரிய ஒளி சர்க்கா அலகுகள் கிராமத் தொழிற்சாலைகளாக வகைப்படுத்தப் பட்டுள்ளன.
இது மும்பையில் உள்ள காதி மற்றும் கிராமத் தொழிற்சாலைகள் ஆணைய (Khadi and Village Industries Commission - KVIC) நிர்வாகக் கட்டுப்பாட்டகத்தின் கீழ் செயல்படும்.
இது ஏறத்தாழ 1 இலட்சம் நபர்களுக்கு நேரடி வேலை வாய்ப்பை உருவாக்கும்.