சமீபத்திய ஆய்வில் 1988 ஆம் ஆண்டிலிருந்து இந்தியாவின் வருடாந்திர சூரிய ஒளிப் பரவல் நேரங்கள் தொடர்ந்து குறைந்து வருவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் (BHU), இந்திய வெப்பமண்டல வானிலை ஆய்வு நிறுவனம் (IITM) மற்றும் இந்திய வானிலை ஆய்வுத் துறை (IMD) ஆகியவற்றின் அறிவியலாளர்களால் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
9 பிராந்தியங்களில் உள்ள 20 வானிலை நிலையங்களில் 1988 முதல் 2018 ஆம் ஆண்டு வரையிலான தரவுகள் சூரிய ஒளி பரவல் நேரக் குறைவை காட்டின.
1990 ஆம் ஆண்டுகளில் இருந்து நகரமயமாக்கல், தொழில்மயமாக்கல் மற்றும் அதிகரித்த புதைபடிவ எரிபொருள் பயன்பாடு ஆகியவற்றால் ஏற்படும் தூசிப்படல / ஏரோசல் அளவுகள் அதிகரிப்பே இந்தச் சரிவுக்குக் காரணமாகும்.
வடகிழக்கு பிராந்தியத்தில் சில பருவகால சமநிலை பதிவானாலும், மற்ற பகுதிகளில் குறிப்பாக ஜூன் முதல் ஜூலை வரை குறிப்பிடத்தக்க சூரிய ஒளி உமிழ்வு நேரத்தில் வீழ்ச்சிகள் பதிவாகின.
ஏரோசோல்கள் சிறிய, நீண்ட காலம் காணப்படும் நீர்த்துளிகளை உருவாக்குவதன் மூலம் சூரியக் கதிர்வீச்சு நிலப்பரப்பினை அடைவதைக் குறைக்கின்ற மேகப் பரவலை அதிகரிக்கின்றன.
ஏரோசோல்களால் தீவிரப்படுத்தப்பட்ட மேகமூட்டம் போன்ற வானிலை காரணிகளும் இந்தியாவில் சூரிய ஒளிப் பரவலைக் குறைக்க பங்களிக்கின்றன.