சூரிய ஒளி மின்கலத்தின் இறக்குமதி மீது விதிக்கப்படும் 25 சதவிகித பாதுகாப்பு வரி
August 2 , 2018 2703 days 940 0
மத்திய அரசாங்கம் சீனா மற்றும் மலேசியா ஆகிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் சூரி ஒளி மின்கலத்தின் மீது 25 சதவிகித பாதுகாப்பு வரியை விதித்துள்ளது (ஒரே தொகுதி அல்லது பலகையில் தொகுக்கப்பட்டாலும் அல்லது தொகுப்படாவிட்டாலும்).
இம்முடிவின் நோக்கம் உள்ளூர் சூரிய ஒளி மின்கல உற்பத்தித் துறையினருக்கு உதவுவது ஆகும்.
வணிகத் தீர்வுகளின் பொது இயக்குனரகத்தின் (Directorate General of Trade Remedies) பரிந்துரையின்படி மத்திய அரசாங்கம் இம்முடிவை எடுத்துள்ளது.
சீனா மற்றும் மலேசியா ஆகிய நாடுகளைத் தவிர மற்ற வளரும் நாடுகளின் மீது இப்பாதுகாப்பு வரி விதிக்கப்படவில்லை.