சந்திரயான்-2 கலத்தில் உள்ள கருவி, நிலவின் மீது சூரிய வெப்ப உமிழ்வின் தாக்கத்தை முதன்முதலில் நேரடியாகக் கண்காணிக்கிறது.
சந்திர சுற்றுப்பாதையில் உள்ள சந்திரயான்-2 கலத்தின் சந்திர வளிமண்டலக் கலவை ஆய்வுக் கருவி - 2 (CHACE-2) என்ற கருவியினால் இந்தக் கண்டறிதல் மேற்கொள்ளப் பட்டது.
சூரியனில் இருந்து தொடர்ச்சியாக வரும் சூரிய வெப்ப உமிழ்வுகள் நிலவின் மீது தாக்கத்தினை ஏற்படுத்தின.
CHACE-2 பகல்நேரச் சந்திர வெளிப்புற மண்டலத்தின் மொத்த எண்ணிக்கை அடர்த்தியில் பத்து மடங்குக்கும் அதிகமான அதிகரிப்பைக் கண்டறிந்தது.
சூரிய துகள்கள் சந்திர மேற்பரப்பில் இருந்து அணுக்களில் மோதி, சூரிய ஒளி பெறும் சந்திர வெளிப்புற மண்டலத்தில் அழுத்தத்தை அதிகரிப்பதால் இந்த அதிகரிப்பு ஏற்பட்டது.