ஆண்டுக்கு 212 சதவீதம் அதிகரிப்பு என்ற அளவில் 2021 ஆம் ஆண்டில் இந்தியா 10 ஜிகா வாட் திறன் அளவில் சூரிய மின் உற்பத்தி சக்தியை நிறுவியது.
இது மெர்காம் இந்தியா ஆராய்ச்சி என்ற ஒரு அமைப்பின் 2021 ஆம் ஆண்டிற்கான வருடாந்திர இந்திய சூரியசக்திச் சந்தைப் புதுப்பிப்பு என்ற அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
2021 ஆம் ஆண்டில், கூரையில் சூரியசக்தித் தகடுகள் நிறுவப்படுவது 138 சதவீதம் அதிகரித்துள்ளது.
2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாத நிலவரப்படி, ராஜஸ்தான், கர்நாடகா மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகியவை பெரிய அளவிலான ஒட்டு மொத்த சூரிய சக்தி உற்பத்தி அடிப்படையில் முதல் மூன்று இடங்களில் உள்ளன.