சூரிய மேற்பரப்பிற்கு அருகிலான அதிக சுழற்சி வீதம் காணப்படும் பகுதி (NSSL)
July 19 , 2025 3 days 14 0
இந்திய வானியற்பியல் நிறுவனத்தின் (IIA) அறிவியல் ஆய்வாளர்கள் உள்ளிட்ட, சூரிய இயற்பியலாளர்களின் சர்வதேச குழுவானது, சூரியனின் மேற்பரப்பிற்கு அருகிலான அதிக சுழற்சி வீதம் காணப்படும் பகுதியில் (NSSL) மாறுநிலை பிளாஸ்மா பாய்வுகள் காணப் படுவதை கண்டறிந்துள்ளது.
இது சூரியனின் 11 ஆண்டு கால காந்தச் செயல்பாட்டு (சூரியப் புள்ளி) சுழற்சியுடன் தொடர்புடைய வடிவங்களை வெளிப்படுத்துகிறது.
பிளாஸ்மா பாய்வுகள் சூரியனின் காந்த இயக்கத்திற்கு ஏற்ப மாறுகின்றன, மேலும் அவை விண்வெளியின் வானிலை மற்றும் பூமியின் மீது தொலை தூரம் வரை பரவும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.
சூரியப் பொருட்களின் இயக்கத்தில் ஏற்படும் மாற்றங்களைக் கண்காணிக்க என்று அவர்கள் சூரியப் பரப்பு அலைப் பகுப்பாய்வு (helioseismology) என்ற ஒரு முறையைப் பயன்படுத்தினர்.
இது சூரியனின் வழியாக பயணிக்கும் போது ஒலி அலைகளைக் கண்காணிக்கும் ஒரு மேம்பட்ட நுட்பமாகும்.
சூரிய மேற்பரப்பிற்கு அருகிலான அதிகமான சுழற்சி வீதம் காணப்படும் பகுதி (NSSL) என்பது சூரியனின் புலப்படும் மேற்பரப்பிற்குக் கீழே அமைந்துள்ள ஒரு முக்கியமான பகுதியாகும் என்பதோடு இது சுமார் 35,000 கிமீ ஆழம் வரை நீண்டுள்ளது.
NSSL பகுதியில், சூரியனின் கோண வேகம் (சுழற்சி வேகம்) ஆரத்தினூடே விரைவாகக் குறைகிறது என்பதோடு இது ஆழம், உயரம் மற்றும் சூரிய காந்த செயல்பாடுகளுடன் மாறுபடும் ஒரு சுழற்சி வீதத்தினை உருவாக்குகிறது.
சூரியக் கரும்புள்ளிப் பகுதிகளை நோக்கி ஒன்றிணைக்கின்ற மேற்பரப்பு பிளாஸ்மா பாய்வுகள், NSSL பகுதியில் மையத்தில் தலைகீழாக மாறி வெளிப்புறமாகப் பாய்ந்து பெரிய சுழற்சி செல்களை உருவாக்குகின்றன என்பதை இந்த ஆய்வு மிகவும் நன்கு வெளிப்படுத்தியது.
இந்தப் பாய்வுகள் சூரியனின் சுழற்சி மற்றும் கோரியோலிஸ் விசையால் மாற்றி அமைக்கப் படுகின்றன என்பதோடு இது பூமியின் புயல் உருவாக்கத்திலும் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்துகிறது.