மார்ச் 25 முதல் ஏப்ரல் ஆம் தேதி வரையில் செங்கோட்டைத் திருவிழா-பாரத் பாக்ய விதாதா என்ற திருவிழாவானது கொண்டாடப்படுகிறது.
இந்த 10 நாட்கள் அளவிலான திருவிழாவானது ஒன்றியக் கலாச்சாரத் துறை அமைச்சகத்துடன் இணைந்து நடத்தப்படுகிறது.
சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழாவினை நினைவு கூறும் விதமாக இந்த நிகழ்வு நிகழ்த்தப் படுகிறது.
இந்த நிகழ்வானது செங்கோட்டையின் மானுமென்ட் மித்ரா அமைப்பு, ஒன்றியக் கலாச்சாரத் துறை அமைச்சகம் மற்றும் டால்மியா பாரத் லிமிடெட் ஆகியவற்றால் உருவாக்கப் பட்டது.