அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் தொடர்புடைய நிலைகளுக்கு எதிரான ராணுவ நடவடிக்கையின் போது, ஈரான் முதன்முறையாக செஜ்ஜில் உந்துவிசை எறிகணைத் தாக்குதலில் ஈடுபடுத்தியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
செஜ்ஜில் என்பது ஈரானின் விண்வெளித் துறையினால் உள்நாட்டிலேயே உருவாக்கப் பட்ட இரண்டு நிலைகளைக் கொண்ட நடுத்தர தூர உந்துவிசை எறிகணையாகும்.
இந்த எறிகணை சுமார் 2,000 கி.மீ செயல்பாட்டுத் வரம்பைக் கொண்டது மற்றும் சுமார் 700 கிலோ எடையுள்ள போர்க்கருவியைச் சுமந்து செல்லும் திறன் கொண்டது.
இந்த ஏவுகணை இடைமறிப்பு ஏவுகணைகளில் இருந்து தப்பிக்க சில சூழ்ச்சிகளைச் செய்யக் கூடியது என்பதால், இது "நடனமாடும் ஏவுகணை" என்று புனைப் பெயர் பெற்றுள்ளது.