சென்டினலீஸ் பழங்குடியினர்களின் பாதுகாப்பிற்கான நடவடிக்கைகள்
February 9 , 2019 2368 days 752 0
சென்டினலீஸ் பழங்குடியினர்களின் நல்வாழ்வு மற்றும் உரிமைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக இந்திய அரசு பல்வேறு சட்டங்கள்/ஒழுங்குமுறைகளை அவ்வப்போது வெளியிட்டு வருகிறது.
சட்டங்கள் / ஒழுங்குமுறைகள் ஒன்றியப் பிரதேசத்தினால் கண்டிப்பாக செயல்படுத்தப்படுகின்றன. இது பின்வருவனவற்றைக் கொண்டிருக்கும்.
அந்தமான் நிகோபார் தீவுகள் (பழங்குடியினரின் பாதுகாப்பு) ஒழுங்கு முறைகள், 1956
பட்டியலிடப்பட்ட பிரிவினர் மற்றும் பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் (வன்முறைகள் தடுப்பு) சட்டம், 1989
வெளிநாட்டினர் செல்லத் தடை செய்யப்பட்ட பகுதிகளின் ஆணை, 1963-ன் கீழ் கட்டுப்பாடுகள் உள்ள பகுதிகள்.
விசா கையேடு நிபந்தனைகள் / கடவுச்சீட்டு சட்டம், 1920 மற்றும்
இந்திய வனச் சட்டம், 1927 மற்றும் வனவிலங்குப் பாதுகாப்புச் சட்டம், 1972.
இவை தவிர, சென்டினலீஸ் பழங்குடியினர்களைப் பாதுகாக்க பின்வரும் முக்கியமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
உயர் கடல் நீர் பகுதியிலிருந்து 5 கிலோ மீட்டருடன் வட சென்டினல் முழுவதும் பழங்குடியினர் உள்ள பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்திய அரசு சென்டினலீஸ் மக்களின் வாழ்க்கை முறைகளுக்கு மதிப்பளிக்கிறது. எனவே, சென்டினலீஸ் பழங்குடியினர்களைப் பாதுகாப்பதற்காக “முழுக் கவனம் மற்றும் கட்டுப்பாடுகள்” என்ற நடைமுறையை ஏற்றுக் கொண்டுள்ளது.
வட சென்டினல் தீவின் கடல் பகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள நெறிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
கடலோரக் காவல்படையின் கப்பல்கள் மற்றும் விமானங்கள், கடலில் உள்ள காவல் துறைப் படகுகள் ஆகியவை வட சென்டினல் தீவினைச் சுற்றி கண்காணிப்பினை மேற்கொள்கின்றன.