சென்னையில் மூன்று அழுத்தப்பட்ட உயிரி இயற்கை எரிவாயு தொழிற்சாலைகள்
August 5 , 2019 2124 days 947 0
பெருநகர சென்னை மாநகராட்சியானது உயிரிக் கழிவிலிருந்து அழுத்தப்பட்ட இயற்கை வாயுவை நிரப்பும் மூன்று அழுத்தப்பட்ட உயிரி இயற்கை எரிவாயு மையங்களை அமைக்க இருக்கின்றது.
இவை பள்ளிக்கரனை, சோழிங்கநல்லூர் மற்றும் அண்ணாநகரில் உள்ள கைவிடப்பட்ட கருங்காரை வளாகம் ஆகிய இடங்களில் அமைக்கப்படும்.
இது அரசு-தனியார் கூட்டுப் பங்களிப்பு முறையில் உற்பத்திக்கும் மையத்தின் மேலாண்மைக்கும் தனியார் நிறுவனம் பொறுப்பாக இருக்கும் வகையில் அமைக்கப்படும்.
அழுத்தப்பட்ட உயிரி இயற்கை எரிவாயு, தெரு விளக்குகளுக்கு ஆற்றலாகவும், சமைப்பதற்காக திரவ எரிவாயுவாகவும், வாகன எரிபொருளாகவும் (CNG பேருந்துகள் மற்றும் விவசாய இயந்திரங்கள்) அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயுவிற்குப் பதிலீடு செய்கின்றது.