TNPSC Thervupettagam

சென்னை உயர்நீதிமன்றம் - தமிழ் மொழி

September 5 , 2026 8 days 89 0
  • சென்னை உயர்நீதிமன்றத்தின் முதன்மை மொழியாக தமிழை அங்கீகரிக்க மத்திய அரசை வலியுறுத்தி தமிழ்நாடு சட்டப்பேரவை ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியது.
  • இந்திய அரசியலமைப்பின் 348(2) ஆவது கூறு, இந்தியக் குடியரசுத் தலைவரின் முன் அனுமதியுடன் உயர்நீதிமன்ற நடவடிக்கைகளில் ஒரு மாநிலத்தின் அதிகாரப்பூர்வ மொழியைப் பயன்படுத்த அனுமதிக்கிறது.
  • இந்தத் தீர்மானம், மனுக்கள், ஆவணங்கள் மற்றும் வாதங்களைத் தமிழில் முன்வைப்பதற்கும், தீர்ப்புகள், தீர்ப்பாணைகள் மற்றும் நீதிமன்ற உத்தரவுகளைத் தமிழில் வழங்குவதற்குமான நடைமுறைகளைக் கோரியது.
  • தேவையான சட்டப்பூர்வ நடவடிக்கைகளுடன், நீதிபதிகள், வழக்கறிஞர்கள் மற்றும் நீதிமன்றப் பணியாளர்களுக்கு சட்டத் தமிழ் மற்றும் மொழிபெயர்ப்புப் பயிற்சி அளிக்கவும் இது வலியுறுத்தியது.
  • 2006 ஆம் ஆண்டு டிசம்பர் 6 அன்று இதே போன்ற ஒருமனதான தீர்மானத்தை நிறைவேற்றியதை சட்டப்பேரவை நினைவு கூர்ந்தது; 2012 ஆம் ஆண்டில் உச்ச நீதிமன்றத்தின் முழு அமர்வு இந்த முன்மொழிவுக்கு ஒப்புக்கொள்ளவில்லை.
  • 2004 ஆம் ஆண்டு அக்டோபர் 12 அன்று மத்திய அரசால் தமிழ் செம்மொழியாக அங்கீகரிக்கப் பட்டது, மேலும் சட்டத் தமிழ், மின்னணு-நீதிமன்றங்கள் (e-Courts), மொழி பெயர்ப்புத் தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை இந்தத் தீர்மானம் சுட்டிக்காட்டியது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்