TNPSC Thervupettagam

சென்னை சதுப்புநில மறுசீரமைப்பு

March 12 , 2026 5 days 142 0
  • சென்னையின் கடலோரச் சுற்றுச்சூழல் அமைப்பை வலுப்படுத்தவும், பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் திறனை மேம்படுத்தவும் பக்கிங்ஹாம் கால்வாய் ஓரத்தில் 20,000 சதுப்பு நிலக் கன்றுகளை தமிழ்நாடு வனத்துறை நட்டுள்ளது.
  • இந்தச் சதுப்புநில மறுசீரமைப்பு, இந்த மாவட்டத்தில் சதுப்புநில இனங்களின் பசுமை வளையத்தை உருவாக்குவதற்கான கட்டங்களைக் கொண்ட திட்டத்தின் ஒரு பகுதி ஆகும்.
  • 2024–25 ஆம் ஆண்டில், ரைசோபோரா முக்ரோனாட்டா, ப்ருகுயேரா சிலிண்ட்ரிகா, அவிசென்னியா மரினா, ஏஜிசெராஸ் கார்னிகுலட்டம், எக்ஸ்கோஎகாரியா அகல்லோச்சா, மற்றும் அகந்தஸ் இலிசிஃபோலியஸ் ஆகிய ஆறு இனங்களைச் சேர்ந்த சுமார் 12,500 நாற்றுகள் 20 ஹெக்டேர் பரப்பளவில் நடப்பட்டன.
  • இரண்டாம் கட்டத்தில், ரைசோபோரா முக்ரோனாட்டா, ரைசோபோரா அபிகுலாட்டா, அவிசென்னியா மரினா மற்றும் எக்ஸ்கோஎகாரியா அகல்லோச்சா உள்ளிட்ட இனங்களின் சுமார் 5,000 சதுப்புநில மரக் கன்றுகள் அடையாறு நதி முகத்துவாரத்தில் உள்ள அடையாறு தீவின் போரில் நடப் பட்டன.
  • சமீபத்திய கட்டத்தில் அவிசென்னியா மரினா, அவிசென்னியா அஃபிசினாலிஸ், ரைசோபோரா முக்ரோனாட்டா, ரைசோபோரா அபிகுலாட்டா மற்றும் எக்ஸ்கோ எகாரியா அகல்லோச்சா ஆகிய ஐந்து இனங்களைச் சேர்ந்த 20,000 நாற்றுகளை நடவு செய்வதை உள்ளடக்கியது.
  • இந்த படிப்படியான மறுசீரமைப்பு சென்னையின் சதுப்புநிலப் பரப்பை மீண்டும் உருவாக்குவதையும், ஒரு உயிருள்ள கடலோரப் பாதுகாப்பு வளையத்தை (Bioshield) உருவாக்குவதையும், புயல் மற்றும் கடல் மட்ட உயர்விலிருந்து நகரத்தைப் பாதுகாப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்