சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளைக் கண்காணித்தல்
March 12 , 2020 1990 days 776 0
தற்பொழுது, சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளைச் ‘சலோ’ செயலியின் உதவியுடன் கைபேசியில் கண்காணிக்க முடியும்.
இந்தச் செயலியானது அருகிலுள்ள பேருந்து நிறுத்தங்கள் குறித்தத் தகவல்களையும் தேர்ந்தெடுக்கப்பட்ட எந்தவொரு நிறுத்தத்திற்கும் வருவதற்குத் திட்டமிடப்பட்டுள்ள அடுத்த ஐந்து பெருநகரப் போக்குவரத்துக் கழக (Metropolitan Transport Corporation - MTC) பேருந்துகள் குறித்த விவரங்களையும் அளிக்கும்.
இது அகல்நிலை மற்றும் நிகழ்நேரம் (ஆன்லைன்) ஆகிய இரண்டு முறைகளிலும் இயங்கும் திறன் கொண்டது.
தற்போது இந்தச் செயலியானது சோதனை முயற்சியாக (பீட்டா) தொடங்கப் பட்டுள்ளது. இது விரைவில் அரசாங்கத்தின் “லோக்கேட் மை பஸ்” (LAMB - Locate My Bus App) என்ற செயலியாக தொடங்கப்பட இருக்கின்றது.