இந்தியப் பிரதமர் 2025 ஆம் ஆண்டு செப்டம்பர் 02 ஆம் தேதியன்று புது டெல்லியில் செமிகான் இந்தியா 2025 என்ற நிகழ்வினைத் தொடங்கி வைத்தார்.
ஒரு டிரில்லியன் டாலர்களை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகின்ற உலகளாவிய குறைக் கடத்தி சந்தையில் குறிப்பிடத்தக்கப் பங்கைக் கைப்பற்றுவதற்காக இந்தியா இலக்கு நிர்ணயித்துள்ளது.
2025 ஆம் ஆண்டில் ஐந்து புதிய குறைக் கடத்தி திட்டங்கள் அங்கீகரிக்கப்பட்டன.
இது பதினெட்டு பில்லியன் டாலர்கள் (1.5 லட்சம் கோடி ரூபாய்) முதலீடுகளுடன் மொத்தம் பத்து திட்டங்களாக அதிகரிக்கப்படுகிறது.