TNPSC Thervupettagam

செமிகான் இந்தியா 2026

September 21 , 2026 15 hrs 0 min 30 0
  • இந்தியாவின் ஐந்தாவது பெரிய குறைகடத்தி மாநாடான செமிகான் இந்தியா 2026 புது தில்லியில் நடைபெற்றது.
  • பிரதமர் நரேந்திர மோடி இந்நிகழ்வை தொடங்கி வைத்து, வணிக ரீதியான குறைகடத்தி உற்பத்தியை நோக்கிய இந்தியாவின் மாற்றத்தை எடுத்துரைத்தார்.
  • இந்தியாவின் குறைகடத்தி சுற்றுச்சூழல் அமைப்பை வலுப்படுத்துவதும், சிப்/சில்லு வடிவமைப்பு, உற்பத்தி மற்றும் மேம்பட்ட பேக்கேஜிங்/பொதியிடல் ஆகியவற்றை மேம்படுத்துவதும் இதன் நோக்கமாகும்.
  • மொஹாலியில் உள்ள CDIL குறைகடத்தி மற்றும் சூரத்தில் உள்ள சுச்சி செமிகான் ஆகியவற்றில் வணிக உற்பத்தி அலகுகள் காணொளி வாயிலாக தொடங்கி வைக்கப் பட்டன.
  • சிப்/சில்லு வடிவமைப்பு, புனையமைப்பு, மேம்பட்ட பேக்கேஜிங்/பொதியிடல், உபகரணங்கள், பொருட்கள், மின்திறன் மின்னணுவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) ஆகியவற்றை உள்ளடக்கிய 56 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் (MoUs), அறிவிப்புகள் மற்றும் உத்திசார் முன்னெடுப்புகள் இந்நிகழ்வில் இடம்பெற்றன.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்