TNPSC Thervupettagam

செயற்கை சூரியன் திட்டம் – இந்தியா

September 19 , 2026 2 days 57 0
  • குஜராத்தில் உள்ள பிளாஸ்மா ஆராய்ச்சி நிறுவனத்தில் (IPR) SST-1 டோகாமாக்கில் புதிய 82.6 GHz, 400 kW கைரோட்ரானை நிறுவியதன் மூலம் இந்தியாவின் இணைவு ஆராய்ச்சி முன்னேற்றம் அடைந்துள்ளது.
  • SST-1 (நிலையான-நிலை மீக்கடத்து டோகாமாக்-1) என்பது இணைவு ஆராய்ச்சிக்காக காந்தரீதியாக வரையறுக்கப்பட்ட சூடான பிளாஸ்மாவை ஆய்வு செய்யும் ஒரு சோதனை இயந்திரமாகும்.
  • புதிய கைரோட்ரான் ஆனது எலக்ட்ரான் சைக்ளோட்ரான் ஒத்ததிர்வு வெப்பமூட்டல் (ECRH) சோதனைகளுக்கு 400 kW வரையிலான ரேடியோ அதிர்வெண் (RF) ஆற்றலை வழங்குகிறது.
  • SST-1 ஏற்கனவே சூரியனின் மையப்பகுதியை விட மிகவும் வெப்பமான 200 மில்லியன் டிகிரி செல்சியஸிற்கும் அதிகமான பிளாஸ்மா வெப்பநிலையை அடைந்துள்ளது.
  • இந்த அமைப்பானது ஏற்கனவே உள்ள 42 GHz, 500 kW ECRH அமைப்புடன் இணைந்து செயல்படுகிறது, இது அறிவியலாளர்களுக்கு பிளாஸ்மா வெப்பமாக்கல், கட்டுப்பாடு மற்றும் நிலைத் தன்மையை ஆய்வு செய்ய உதவுகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்