செயற்கை நுண்ணறிவினால் இயக்கப்படும் தணிக்கை அமைப்பு
September 26 , 2025 46 days 176 0
தணிக்கைச் செயல்திறனை மேம்படுத்துவதற்காக, இந்தியத் தலைமை கணக்குத் தணிக்கை அலுவலகமானது (CAG) செயற்கை நுண்ணறிவால் இயக்கப்படும் ஒரு பெரிய மொழி மாதிரியை (LLM) உருவாக்கி வருகிறது.
செயற்கை நுண்ணறிவு அமைப்பு தணிக்கையாளர்கள் பல தசாப்த கால நிறுவன அறிவை அணுகவும், தணிக்கைப் பகுப்பாய்வில் நிலைத் தன்மையை அதிகரிக்கவும் உதவும்.
இந்த அமைப்பின் முதல் பதிப்பு ஆனது 2025 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்திற்குள் தயாராக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.