செயற்கை நுண்ணறிவில் இயங்கும் நிகழ்நேர வன எச்சரிக்கை அமைப்பு
May 7 , 2025 98 days 147 0
மத்தியப் பிரதேச வனத்துறையானது, காடழிப்பை எதிர்த்துப் போராடுவதற்காக என செயற்கை நுண்ணறிவில் இயங்கும் ஓர் எச்சரிக்கை அமைப்பைப் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளது.
இது இந்தியாவில் இந்த மாதிரியிலான முதவ் அமைப்பாகும்.
இந்த நிகழ்நேர வனத்திற்கான எச்சரிக்கை அமைப்பானது, சிவபுரி, குணா, விதிஷா, புர்ஹான்பூர் மற்றும் காண்ட்வா ஆகிய மாவட்டங்களில் ஒரு சோதனைத் திட்டமாக செயல்படுத்தப்படுகிறது.
மேகக்கணிமையின் அடிப்படையிலான அமைப்பான இது, செயற்கைக்கோள் தரவு, இயந்திர கற்றல் படிமுறைகள் மற்றும் நிகழ்நேரக் களக் கருத்துரைப்புகளை மிகவும் நன்கு ஒருங்கிணைத்து வனப்பகுதிகளை முன்னெப்போதும் இல்லாத வகையில் ஒரு துல்லியத்துடன் கண்காணிக்கிறது.
2023 ஆம் ஆண்டு இந்திய வன ஆய்வு அறிக்கையின்படி, மத்தியப் பிரதேசம் 85,724 சதுர கி.மீ. பரப்பளவில் மிகப்பெரிய காடு மற்றும் மரங்கள் கொண்ட ஒரு நிலப்பரப்பைக் கொண்டுள்ளது.
மத்தியப் பிரதேசமானது, சுமார் 612.41 சதுர கிலோ மீட்டர் வனம் சார் நிலத்தை அதிக அளவில் இழந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.