செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான எச்சரிக்கை அமைப்பு
August 16 , 2025 2 days 30 0
யானைகள் இறப்பதைத் தடுப்பதற்கான செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான எச்சரிக்கை அமைப்பு ஆனது, 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் கோயம்புத்தூர் பிரிவின் மதுக்கரை வனப்பகுதியில் உள்ள இரயில் பாதைகளில் நிறுவப்படத் தொடங்கப்பட்டது.
இது இன்று வரை சுமார் 2,800 காட்டு யானைகள் பாதுகாப்பாக இரயில் பாதைகளைக் கடக்க உதவியது.
இந்தத் திட்டமானது, மனித மற்றும் வனவிலங்கு மோதலைக் குறைப்பதற்காக செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான ரேடியோ பட்டைகள் மற்றும் செயற்கைக் கோள் தரவுகளைப் பயன்படுத்துகிறது.
வனப்பகுதிகள் வழியாகக் கடக்கும் அனைத்து இரயில் பாதைகளிலும் இதேபோன்ற முன் எச்சரிக்கை அமைப்பு நிறுவப்படும்.
இரயில் மோதல்களால் யானைகள், புலிகள் மற்றும் பிற வன விலங்குகள் இறப்பதைத் தடுப்பதே இந்த அமைப்பின் நோக்கமாகும்.
இந்த முன்னெடுப்பானது சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத் துறை அமைச்சகத்தினால் (MoEF&CC) செயல்படுத்தப்பட்டது.