TNPSC Thervupettagam

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான காப்பு கண்காணிப்பு அமைப்பு - DRISHTI

November 23 , 2025 5 days 34 0
  • சரக்கு இரயில் பெட்டிகளின் கதவுகளை நிகழ்நேரத்தில் கண்காணிக்க DRISHTI எனப்படும் செயற்கை நுண்ணறிவில் இயங்கும் அமைப்பை நிறுவ இந்திய இரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
  • இந்த அமைப்பை வடகிழக்கு எல்லைப்புற இரயில்வே (NFR) மற்றும் கௌஹாத்தியின் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகத்தின் தொழில்நுட்பக் கண்டுபிடிப்பு மற்றும் மேம்பாட்டு அறக்கட்டளை (TIDF) ஆகியவை இணைந்து உருவாக்கியுள்ளன.
  • போக்குவரத்தின் போது திறக்கப்பட்ட, திறந்த அல்லது சேதப்படுத்தப்பட்ட சரக்கு இரயில் பெட்டிகளின் கதவுகளை DRISHTI தானாகவே கண்டறிய முடியும்.
  • இது தொடர்ச்சியான கண்காணிப்புக்கு AI ஒளிப்படக் கருவிகள், உணர்வுக் கருவிகள், கணினி கண்காணிப்பு மற்றும் இயந்திர கற்றல் வழிமுறைகளைப் பயன்படுத்துகிறது.
  • ஏதேனும் அசாதாரண நடவடிக்கைகள் இருந்தால் இரயில்களின் செயல்பாடுகளுக்கு இடையூறு விளைவிக்காமல் இந்த அமைப்பு நிகழ்நேர எச்சரிக்கைகளை அனுப்புகிறது.
  • இதன் முக்கிய நோக்கம் சரக்கு போக்குவரத்துப் பாதுகாப்பை மேம்படுத்துதல், நேரடி ஆய்வுகளைக் குறைத்தல் மற்றும் இந்திய இரயில்வே முழுவதும் செயல்பாட்டுத் திறனை மேம்படுத்துவதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்