செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான வனவிலங்குப் பாதுகாப்பு 2025
December 27 , 2025 7 days 41 0
இரயில் பாதைகளில் வனவிலங்குகள் இறப்பதைத் தடுக்க இந்திய இரயில்வே நிர்வாகம் செயற்கை நுண்ணறிவு (AI) அமைப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
செயற்கை நுண்ணறிவு மூலம் இயக்கப்பட்ட ஒளிப்படக் கருவிகள் தண்டவாளங்களுக்கு அருகில் உள்ள விலங்குகளைக் கண்டறிந்து, இரயில் எஞ்சின் ஓட்டுநர்களுக்கு /லோகோ பைலட்டுகளுக்கு சுமார் 500 மீட்டர் தொலைவிற்கு முன்னதாகவே எச்சரிக்கைகளை அனுப்புகின்றன.
காடு மற்றும் யானை வழித்தடப் பகுதிகளில் இரயில்களை மெதுவாக இயக்க அல்லது நிறுத்த இந்த அமைப்பு உதவுகிறது.
தரை அதிர்வுகள் மூலம் யானைகளின் நடமாட்டத்தைக் கண்டறிய ஒரு ஒலி அமைப்பு தொகுப்பு (DAS) பயன்படுத்தப்படுகிறது.
வடகிழக்கு எல்லைப்புற இரயில்வே நிர்வாகத்தின் கீழ் சுமார் 141 வழித்தட கிலோ மீட்டர்களில் இந்த அமைப்பு செயல்படுகிறது.
இந்திய இரயில்வே நிர்வாகமானது அதன் வலையமைப்பு முழுவதுமாக 1,122 கிலோ மீட்டருக்கு இந்த அமைப்பை விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ளது.