TNPSC Thervupettagam

செயற்கை நுண்ணறிவு சார்ந்த ஆய்வக உதவியாளர் – AILA

December 28 , 2025 4 days 42 0
  • டெல்லியின் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் AILA எனப்படும் ஒரு செயற்கை நுண்ணறிவு (AI) அமைப்பை உருவாக்கியுள்ளனர்.
  • AILA என்பது செயற்கை நுண்ணறிவு ஆய்வக உதவியாளரை (Artificially Intelligent Lab Assistant) குறிக்கிறது.
  • இது மிகக் குறைவான மனித உதவியுடன் உண்மையான ஆய்வகச் சோதனைகளை மேற்கொள்வதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • AILA என்பது ஒரு அறிவியளாலரைப் போல சிந்தித்து முடிவுகளை எடுக்கக் கூடிய ஒரு முகவர் செயற்கை நுண்ணறிவு (AI) கட்டமைப்பைப் பயன்படுத்தி செயல்படுகிறது.
  • நுண் தொழில்நுட்ப ஆராய்ச்சியில் பயன்படுத்தப்படும் ஒரு கருவியான அணுவிசை நுண்ணோக்கியைப் பயன்படுத்தி இந்த அமைப்பு சோதிக்கப் பட்டது.
  • AILA சோதனையானது நேரத்தை பல மணிநேரங்கள் அல்லது நாட்களில் இருந்து சில நிமிடங்களாகக் குறைக்கக் கூடியது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்