செயற்கை நுண்ணறிவு நுட்பத்தினை ஒழுங்குமுறைப்படுத்தச் செய்வதற்கான கட்டமைப்பு
December 17 , 2023 507 days 271 0
பிரதமருக்கான பொருளாதார ஆலோசனைக் குழு (EAC-PM) “செயற்கை நுண்ணறிவு நுட்பத்தினை ஒழுங்குமுறைப் படுத்தச் செய்வதற்கான ஒரு பல்கலப்பு ஏற்பு அமைப்பு கட்டமைப்பு” என்ற ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது.
மேலும், ஐரோப்பிய ஒன்றியம் (EU) செயற்கை நுண்ணறிவை (AI) ஒழுங்குமுறைப் படுத்துவதற்கான உலகின் முதல் விரிவான சட்டங்கள் பற்றிய மிகவும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தற்காலிக ஒப்பந்தத்தை எட்டியுள்ளது.
விதிகளை மீறும் நிறுவனங்களுக்கு கடுமையான அபராதங்களை விதிப்பதற்கான விதிகளுடன், முகத்தை அடையாளம் காணும் தொழில்நுட்பம் மற்றும் மனித நடத்தையை நகலாக்கம் செய்ய செயற்கை நுண்ணறிவு நுட்பத்தினைப் பயன்படுத்த செய்வதில் விதிக்கப்படும் வலுவான கட்டுப்பாடுகள் இந்த ஒப்பந்தத்தில் அடங்கும்.