TNPSC Thervupettagam

செயற்கை நுண்ணறிவு மேம்பாட்டுத் திட்டம்

October 13 , 2025 14 hrs 0 min 21 0
  • நிதி ஆயோக் அமைப்பானது, புது டெல்லியில் "AI for Inclusive Societal Development" என்ற கருத்துருவில் ஒரு செயல் திட்டத்தினை வெளியிட்டது.
  • செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் வளர்ந்து வரும் புதியத் தொழில்நுட்பங்கள் இந்தியாவின் 490 மில்லியன் முறைசாரா தொழிலாளர்களுக்கு எவ்வாறு ஆதரவளிக்க முடியும் என்பதில் இந்த ஆய்வு கவனம் செலுத்துகிறது.
  • முறைசாரா துறையானது இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 50 சதவீதத்தைப் பங்களிக்கிறது என்றாலும், அத்துறையில் முறையான பாதுகாப்பு மற்றும் வாய்ப்புகள் இல்லை.
  • முறைசாரா தொழிலாளர்களுக்கு உள்ளடக்கிய வகையிலான செயற்கை நுண்ணறிவு சூழல் அமைப்பை உருவாக்க டிஜிட்டல் ஷ்ராம்சேது என்ற தேசியத் திட்டத்தினை நிதி ஆயோக் முன்மொழிந்தது.
  • நிதியியல் பாதுகாப்பின்மை மற்றும் திறன் இல்லாமை போன்ற சவால்களை எதிர் கொள்வதற்காக இந்தத் திட்டமானது செயற்கை நுண்ணறிவு, தொடர் சங்கிலித் தொழில் நுட்பம் மற்றும் அதிவேகத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தும்.
  • திட்ட அமலாக்கம் இல்லாமல், முறைசாரா தொழிலாளர்களின் சராசரி வருடாந்திர வருமானம் ஆனது 2047 ஆம் ஆண்டில், 14,500 டாலர் என்ற அதிகபட்ச வருமான வரம்பிற்கு கீழே 6,000 டாலராக இருக்கும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்