TNPSC Thervupettagam

செயற்கை நுண்ணறிவு (AI) குறித்த ஐநா அறிக்கை

July 17 , 2026 10 days 122 0
  • ஐக்கிய நாடுகள் சபையானது (UN) செயற்கை நுண்ணறிவு (AI) குறித்த தனது முதல் அறிவியல் மதிப்பீட்டு அறிக்கையை வெளியிட்டுள்ளது, இது உலகளாவிய நடவடிக்கை மற்றும் நிர்வாகத்தின் தேவையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
  • இந்த அறிக்கை யோசுவா பெஞ்சியோ மற்றும் மரியா ரெசா ஆகியோரை இணைத் தலைவர்களாகக் கொண்ட, 40 உறுப்பினர்களைக் கொண்ட செயற்கை நுண்ணறிவுக்கான சுதந்திரமான சர்வதேச அறிவியல் தயாரிக்கப்பட்டது.
  • இது சுகாதாரம், கல்வி, விவசாயம், பொருளாதாரம், பாதுகாப்பு, சுற்றுச்சூழல், மனித உரிமைகள் மற்றும் நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஏற்பட்டுள்ள AI முன்னேற்றங்களை ஆராய்ந்தது.
  • தற்போதைய பாதுகாப்பு விதிகள் மற்றும் உலகளாவிய ஆளுகை முறைகளை விட AI தொழில்நுட்பத்தின் வளர்ச்சி மிக வேகமாக முன்னேறி வருகிறது என்று இந்த அறிக்கை எச்சரித்துள்ளது.
  • இது உலகளாவிய AI கணினித் திறனில் அமெரிக்கா (US) சுமார் 75% மற்றும் சீனா சுமார் 15% பங்கைக் கொண்டிருப்பதன் மூலம் நிலவும் 'AI கணினித் திறன் இடைவெளியை' சுட்டிக் காட்டியுள்ளது.
  • கணினி உள்கட்டமைப்பு, மேம்பட்ட சில்லுகள் மற்றும் தரமான தரவுகள் இல்லாத நாடுகள், ஒரு சில முன்னணி AI நாடுகள் மற்றும் நிறுவனங்களைச் சார்ந்து இருக்க நேரிடும் என்று இந்த அறிக்கை கூறுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்