செய்ன் நதியில் கழிவுநீர் கலப்பு பிரச்சனை – பிரான்ஸ்
July 11 , 2025 81 days 101 0
பாரீஸ் நகர நிர்வாகமானது, 1923 ஆம் ஆண்டில் ஏற்பட்ட நூற்றாண்டு காலக் கழிவுநீர் மாசுபாடு பிரச்சினைக்குப் பிறகு முதல் முறையாக செய்ன் நதியில் பொது மக்கள் நீச்சல் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு மீண்டும் அனுமதித்துள்ளது.
2024 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளின் கீழ் திறந்த கள நீர் சாகசப் போட்டிகள் நடத்தப் படுவதற்காக இந்த நதியில் மேற்கொள்ளப்பட்ட ஏற்பாடுகள் காரணமாக சுத்தம் செய்யும் நடவடிக்கை தொடங்கப் பட்டது.
இந்நகரத்தின் பழைய கழிவுநீர் அமைப்பு ஆனது, கனமழையின் போது சுத்திகரிக்கப் படாத கழிவுகள் இந்த ஆற்றில் பெருக்கெடுத்து ஓட வழி வகுத்தது இதனால் ஈ கோலி பாக்டீரியாக்கள் ஆபத்தான அளவில் அதிகரித்தன.