TNPSC Thervupettagam

செறிவூட்டப்பட்ட அரிசிக்கான திட்டம்

April 13 , 2022 1211 days 494 0
  • பொருளாதார விவகாரங்கள் மீதான மத்திய அமைச்சரவைக் குழுவானது, 2024 ஆம் ஆண்டுக்குள் அரசுத் திட்டங்களின் கீழ், செறிவூட்டப்பட்ட அரிசியினை விநியோகம் செய்வதற்கான ஒரு திட்டத்திற்கு  ஒப்புதல் அளித்தது.
  • பிரதமர் தலைமையிலான மத்திய அமைச்சரவையானது, கீழ்க்கண்ட அமைப்புகளின் மூலம் செறிவூட்டப்பட்ட அரிசியினை விநியோகம் செய்வதற்கு ஒப்புதல் அளித்து உள்ளது.
    • தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழான இலக்கு நிர்ணயிக்கப்பட்ட பொது விநியோக அமைப்பு,
    • ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டுச் சேவை அமைப்பு,
    • பிரதான் மந்திரி போஷன் சக்தி நிர்மான – PM POSHAN (முன்னதாக மத்திய உணவுத் திட்டம் என்றழைக்கப்பட்டது) மற்றும்
    • அனைத்து மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களில் பல கட்டங்களாக செயல்படுத்தப்படும் இந்திய அரசின் இதர நலத்திட்டங்கள்.
  • இந்த முன்னெடுப்பானது 3 கட்டங்களாக அமல்படுத்தப்படும்
    • முதல் கட்டம் – 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள், இந்தியா முழுவதும் PM POSHAN மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டுச் சேவை அமைப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
    • இரண்டாம் கட்டம் – பசியால் வாழும் அதிக சுமையுள்ள மாவட்டங்களில் (மொத்தம் 291 மாவட்டங்கள்) உள்ள இதர அரசுத் திட்டங்கள் மற்றும் இலக்கு நிர்ணயிக்கப்பட்ட பொது விநியோக அமைப்பு திட்டங்களுடன் முதல் கட்டத் திட்டமும் அமல்படுத்தப்படும்.
    • மூன்றாம் கட்டம் – 2024 ஆம் ஆண்டிற்குள் மீதமுள்ள மாவட்டங்களில் இரண்டாம் கட்டத்தோடுச் சேர்த்து இத்திட்டம் அமல்படுத்தப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்