மக்களவைத் தேர்தலுக்கான தேர்தல் செலவு வரம்பினை ₹70 லட்சத்தில் இருந்து ₹95 லட்சமாக தேர்தல் ஆணையம் உயர்த்தியுள்ளது.
மாநிலச் சட்டசபைத் தேர்தலுக்கான செலவு வரம்பு ஆனது ₹28 லட்சத்தில் இருந்து ₹40 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
செலவினங்களின் மீதான பணவீக்கக் குறியீட்டின் அதிகரிப்பு மற்றும் வாக்காளர்கள் பட்டியலில் மக்கள் தொகையின் எண்ணிக்கை அதிகரிப்பு ஆகியவற்றின் காரணமாக இந்தச் செலவினங்களில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், கோவா மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் தற்போது நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு இந்தப் புதிய செலவின வரம்புகள் பொருந்தும்.