இது கிரகத்தின் வெப்பமான, ஈரப்பதமான மற்றும் உயிர்கள் வாழக்கூடிய பண்டைய சூழலுக்கான முக்கியமான ஆதாரங்களை வழங்கியது.
இது செவ்வாய்க் கிரகத்தில் கார்பன் சுழற்சிக்கான முதல் உறுதியான ஆதாரத்தைக் குறித்தது.
செவ்வாய்க் கிரகப் பாறைகளின் சல்பேட் நிறைந்த அடுக்குகளில் காணப்படும் சிடரைட்டில் கார்பன் மற்றும் ஆக்ஸிஜன் உள்ளது.
இந்தக் கனிமம் ஆனது செவ்வாய்க் கிரகத்தில் கண்டுபிடிக்கப்பட்டது இதுவே முதல் முறையாகும்.
2011 ஆம் ஆண்டு நவம்பர் 26 ஆம் தேதியன்று அட்லஸ் V ஏவு கலத்தில் ஏவப்பட்ட ஒரு இயந்திர உலாவிக் கலமான நாசாவின் கியூரியாசிட்டி ஆனது 2012 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 05 ஆம் தேதியன்று செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கியது.
இது நாசாவின் செவ்வாய் அறிவியல் ஆய்வக (MSL) ஆய்வுத் திட்டத்தின் ஒரு பகுதி ஆகும்.
செவ்வாய்க் கிரகத்தின் மேற்பரப்பை அடைய வான்வழி ஊர்தி மூலம் தரையிறங்கும் அமைப்பைப் பயன்படுத்திய முதல் கலமாகும்.