TNPSC Thervupettagam

செவ்வாய்க் கிரக நிலப்பரப்புகளுக்கான புதிய பெயர்கள்

November 30 , 2025 12 days 98 0
  • செவ்வாய்க் கிரகத்தில் உள்ள 3.5 பில்லியன் ஆண்டுகள் பழமையான பள்ளத்திற்கு இந்தியப் புவியியலாளர் M.S. கிருஷ்ணனின் பெயரிடப்பட்டுள்ளது.
  • சர்வதேச வானியல் ஒன்றியம் (IAU) ஆனது இந்தப் பெயரை அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்தது.
  • கேரளாவினை அடிப்படையாகக் கொண்டு வலியமலை, தும்பா, பெக்கல், வர்க்கலா மற்றும் பெரியார் ஐந்து பெயர்கள் தற்போது அருகிலுள்ள பள்ளங்களுக்கும் செவ்வாய்ப் பள்ளத்தாக்கிற்கும் வழங்கப்பட்டுள்ளன.
  • இந்தப் பள்ளம் ஆனது பண்டைய காலப் பனிப்பாறைகள் மற்றும் ஆறுகளின் சான்றுகளைக் கொண்ட ஒரு பகுதியான சாந்தே டெர்ராவில் அமைந்துள்ளது.
  • பெரிய பள்ளங்களுக்கு இறந்த விஞ்ஞானிகளின் பெயரிடப்பட்டுள்ளன; சிறிய பள்ளங்களுக்கு நகரங்கள் அல்லது கிராமங்களின் பெயரிடப் பட்டுள்ளன.
  • செவ்வாய்க் கிரகத்தில் உள்ள அம்சங்களுக்கு கேரளாவில் உள்ள இடங்களின் பெயர்கள் பயன்படுத்தப் படுவது இதுவே முதல் முறையாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்