TNPSC Thervupettagam

செவ்வாய் கிரகத்தின் நிலவுகள் ஆய்வுத் திட்டம்

October 24 , 2026 15 hrs 0 min 15 0
  • செவ்வாய் கிரகம் மற்றும் அதன் இரண்டு நிலவுகளை (போபோஸ் மற்றும் டீமோஸ்) ஆய்வு செய்வதற்காக ஜப்பானின் செவ்வாய் கிரகத்தின் நிலவுகள் ஆய்வுத் திட்டம் (MMX) தொடங்கப்பட்டுள்ளது.
  • செவ்வாய் கிரகத்தின் நிலவில் தரையிறங்கி, பூமிக்குக் கொண்டு வருவதற்கான மாதிரிகளைச் சேகரிக்கும் முதல் திட்டமாக இத்திட்டம் அமையும்.
  • பாறைகள் மற்றும் மேற்பரப்புப் பொருட்களைச் சேகரிப்பதற்காக, செவ்வாய் கிரகத்தின் பெரிய மற்றும் நெருக்கமான நிலவான போபோஸை (Phobos) MMX திட்டம் இலக்காகக் கொள்ளும்.
  • இந்த மாதிரிகள் செவ்வாய் கிரகம் மற்றும் அதன் நிலவுகளின் தோற்றம் மற்றும் பரிணாமம், அத்துடன் சூரியக் குடும்பத்தின் ஆரம்பகால வரலாறு குறித்த தகவல்களை வழங்கக் கூடும்.
  • இத்திட்டத்தை ஜப்பான் விண்வெளி ஆய்வு முகமை (JAXA) முன்னெடுத்துச் செல்கிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்