எல்லைச் சாலைகள் அமைப்பு (BRO), ராஜஸ்தானின் பிகானேரில் சேத்தக் திட்டத்தின் 47வது ஸ்தாபன தினத்தைக் கொண்டாடியது.
இந்தியாவின் மேற்கு எல்லைப் பகுதிகளில் உத்திசார் முக்கியத்துவம் வாய்ந்த சாலைகளை மேம்படுத்தவும் பராமரிக்கவும் 1980-ஆம் ஆண்டில் இது நிறுவப்பட்டது.
இது ராஜஸ்தான், பஞ்சாப் மற்றும் குஜராத் போன்ற மாநிலங்களில் செயல்படுகிறது, குறிப்பாக இந்திய-பாகிஸ்தான் எல்லைக்கு அருகிலான சாலை இணைப்பை மேம்படுத்துகிறது.
இத்திட்டத்தின் கீழ் சுமார் 4,000 கி.மீ-க்கும் அதிகமான சாலைகள் மற்றும் பாதுகாப்பு ஆதரவுக்காக 214 கி.மீ நீளமுள்ள பாதுகாப்பு அகழிகள் மற்றும் வரப்புகள் அமைக்கப் பட்டுள்ளன.
இது படைகள் மற்றும் உபகரணங்களின் விரைவான நடமாட்டத்திற்கு உதவுவதன் மூலம் தேசியப் பாதுகாப்பையும் பிராந்திய வளர்ச்சியையும் வலுப்படுத்துகிறது.