சேனா நோவெஹோ மேஸ்தா நத் மெதுஜி விளையாட்டுப் போட்டிகள்
July 23 , 2018 2479 days 872 0
செக் குடியரசில் நடைபெற்ற சேனா நோவெஹோ மேஸ்தா நத் மெதுஜி விளையாட்டுப் போட்டிகளில் நடைபெற்ற 400 மீட்டர் பந்தயத்தில் இந்தியாவின் முகமது அனஸ்யாகியா தேசிய அளவிலான தனது சொந்த சாதனையை முறியடித்துள்ளார்.
400 மீட்டர் பந்தயத்தை 45.24 வினாடிகளில் கடந்து தங்கப் பதக்கத்தை வென்று முகமது அனஸ் யாகியா புதிய சாதனையைப் படைத்துள்ளார்.
கோல்ட் கோஸ்ட் காமன்வெல்த் போட்டிகளில் 45.31 வினாடிகளுடன் 4வது இடத்தினைப் பிடித்ததே இவரது முந்தைய தேசிய அளவிலான சாதனை ஆகும்.
மகளிருக்கான போட்டியில் M.R. பூவம்மா 53.01 வினாடிகள் என்ற கால அளவில் தங்கப் பதக்கத்தினை வென்றுள்ளார்.
ராஜீவ் ஆரோக்யா, 20.77 வினாடிகள் என்ற கால அளவில் ஆடவருக்கான 200 மீட்டர் போட்டியில் மூன்றாவது இடத்தினைப் பிடித்துள்ளார்.