TNPSC Thervupettagam

சேவா தீர்த்தம் - புதிய பிரதமர் அலுவலக வளாகம்

February 17 , 2026 19 hrs 0 min 34 0
  • பிரதமர் நரேந்திர மோடி தனது அதிகாரப்பூர்வப் பணியிடத்தை புதுதில்லியில் உள்ள ரைசினா மலைக்கு அருகில் புதிதாக கட்டப்பட்ட சேவா தீர்த்தத்திற்கு மாற்றினார்.
  • இதன் மூலம் பிரதமர் அலுவலகம் கிட்டத்தட்ட எட்டு தசாப்த காலமாக தெற்குத் தொகுதியில் இருந்து செயல்பட்டு வந்த மரபு முடிவுக்கு வந்தது.
  • வடக்குத் தொகுதி மற்றும் தெற்குத் தொகுதி ஆகியவை முதலில் ஆங்கிலேய அரசாங்கத்திற்காக கட்டப்பட்டன என்பதோடு மேலும் அவை 1947 ஆம் ஆண்டில் சுதந்திர இந்தியாவால் கையகப்படுத்தப்பட்டன.
  • எட்வின் லுட்யென்ஸின் சமகாலத்தவரான கட்டிடக் கலைஞர் ஹெர்பர்ட் பேக்கரால் அவை வடிவமைக்கப்பட்டன.
  • முன்னதாக, தெற்குத் தொகுதியில் பிரதமர் அலுவலகம் மற்றும் மத்திய வெளியுறவு மற்றும் பாதுகாப்பு அமைச்சகங்கள் இருந்தன, அதே நேரத்தில் வடக்குத் தொகுதியில் உள்துறை மற்றும் நிதி அமைச்சகங்கள் இருந்தன.
  • இந்தக் கட்டிடங்கள் இப்போது அருங்காட்சியகங்களாக மாற்றப்படும்.
  • புதிய சேவா தீர்த்த வளாகம், மத்திய எழில்முற்றத் திட்டத்தின் ஒரு பகுதியாக, முன்னர் வெவ்வேறு இடங்களில் அமைந்திருந்த பிரதமர் அலுவலகம், அமைச்சரவை செயலகம் மற்றும் தேசியப் பாதுகாப்பு குழுமச் செயலகத்தை ஒன்றிணைக்கிறது.
  • இந்தக் கட்டிடக்கலை வடிவமைப்பில் 11-13 ஆம் நூற்றாண்டுகளைச் சேர்ந்த சாளுக்கியர் கோயில் கல் திரை வேலைப்பாடுகளால் ஈர்க்கப்பட்ட நுழைவாயில் மற்றும் சென்னகேசவர் கோயிலால் ஈர்க்கப்பட்ட செதுக்கப்பட்ட கல் பீடப் பட்டை ஆகியவை அடங்கும்.
  • புதிய பிரதமர் அலுவலக வளாகத்திற்கு "சேவா தீர்த்தம்" என்று பெயரிடும் தீர்மானத்தை மத்திய அமைச்சரவை நிறைவேற்றியது.
  • பிரதமர், தேவநாகரி எழுத்துக்களில் "நாக்ரிக் தேவோ பவ" (குடிமகன் கடவுளுக்கு நிகர்) என்ற வாசகத்துடன் கூடிய பெயரைக் கொண்ட பலகையைத் திறந்து வைத்தார்.
  • 1931 ஆம் ஆண்டு இந்தியாவின் நவீன தலைநகராக புது தில்லி திறக்கப்பட்டதிலிருந்து 95வது ஆண்டைக் குறிக்கும் நாளில் இந்த மாற்றம் நிகழ்ந்தது.
  • முன்னதாக, ஆங்கிலேய இந்தியாவின் தலைநகரம் 1912 ஆம் ஆண்டு கொல்கத்தாவிலிருந்து டெல்லிக்கு மாற்றப்பட்டது.
  • பிரதமரின் இல்லம், முன்னர் ரேஸ் கோர்ஸ் சாலை என்று அழைக்கப்பட்ட லோக் கல்யாண் மார்க்கில் இன்னும் அமைந்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்