உலகளாவியப் பார்வையாளர்களுக்கு முன்பாக பல்வேறு சேவைத் துறைகளில் இந்தியாவின் திறன்களை வெளிப்படுத்துவதற்காக சேவைகள் குறித்த 5வது உலகளாவியக் கண்காட்சி (Global Exhibition on Services - GES) பெங்களூரில் நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றது.
இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சேவைத் துறையானது 60 சதவீதம் பங்களிக்கின்றது.
இந்தியாவில் அந்நிய நேரடி முதலீட்டில் 55 சதவீதத்திற்கும் அதிகமானவை சேவைத் துறையைச் சேர்ந்தவையாக உள்ளது.
முதல் GES கண்காட்சியானது புது தில்லியில் 2015 ஆம் ஆண்டில் நடைபெற்றது.