இந்தியாவின் சேவைகள் துறையின் வளர்ச்சி ஆகஸ்ட் மாதத்தில் 15 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரித்தது.
கடந்த காலாண்டில் இந்தத் துறை எதிர்பார்த்ததை விட மிக அதிகமாக 7.8% விகிதத்தில் வளர்ந்தது.
2025 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் 60.5 ஆக இருந்த HSBC இந்தியச் சேவைகள் கொள்முதல் மேலாளர்கள் குறியீடு (PMI) ஆனது 2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் 62.9 ஆக உயர்ந்தது.
S&P குளோபல் நிறுவனத்தின் படி, இது சேவைத் துறையில் கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத அளவிலான மிக அதிக PMI குறியீடாகும்.
சேவைத் துறையானது வலுவான புதிய கொள்முதல் ஆர்டர்கள் மற்றும் உலகளாவிய விற்பனையால் 60 என்ற குறியீட்டினைத் தாண்டுவது இது தொடர்ந்து மூன்றாவது மாதமாகும்.
ஜூலை மாதத்தில் 61.1 ஆக இருந்த, சேவைகள் மற்றும் உற்பத்தித் துறைகளை ஒருங்கிணைக்கும் கூட்டு PMI, ஆகஸ்ட் மாதத்தில் 17 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 63.2 ஆக உயர்ந்தது.