சேவை சார்ந்த வர்த்தகக் கட்டுப்பாடு குறியீடு (STRI)
February 20 , 2023 909 days 532 0
2022 ஆம் ஆண்டிற்கான சேவை சார்ந்த வர்த்தகக் கட்டுப்பாடு குறியீட்டில் (STRI) இந்தியா 47வது இடத்தில் உள்ளது.
பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பினால் (OECD) இந்தக் கணக்கெடுப்பானது மேற்கொள்ளப்பட்டது.
ரஷ்யா-உக்ரைன் போர் காரணமாக, ரஷ்யா இந்தக் குறியீட்டில் 48வது இடத்திற்கு சரிந்தது.
சேவை சார்ந்த வர்த்தகக் கட்டுப்பாடு குறியீடானது, அந்தத் துறைகள் மற்றும் தொழிற் சாலைகளில் உள்ள வர்த்தகம் செய்வதை எளிமையாக்கச் செய்தலை மேம்படுத்தும் அரசாங்கத்தின் பல துறை கொள்கைகளைக் கருத்தில் கொள்கின்றன.
இந்தக் குறியீட்டின்படி, சுழியம் என்பது குறைந்தபட்சக் கட்டுப்பாடுகள் உள்ளது என்பதனையும், ஒன்று என்பது எந்தக் கட்டுப்பாடும் இல்லாத ஒரு நிலையினையும் குறிப்பிடுகிறது.
இந்தத் தரவுத் தளமானது வர்த்தகம் செய்ய மிகவும் விரும்பத் தகுந்த தேசம் என்ற ஒரு அந்தஸ்தின் அடிப்படையிலான விவரங்களையும் பதிவு செய்கிறது.