TNPSC Thervupettagam
November 9 , 2021 1384 days 549 0
  • சைடஸ் கேடில்லா நிறுவனத்தின் தயாரிப்பான, 3 தவணைகள் அளவிலான சைகோவ் – D எனும் கோவிட் – 19 தடுப்பு மருந்தினை ஒரு தவணைக்கு ரூ.265 என்ற விலை வீதத்தில் ஒரு கோடி தவணைகளை மத்திய அரசு வாங்க உள்ளது.
  • சைகோவ் – D என்பது உலகில் மனிதப் பயன்பாட்டிற்கு வந்த முதலாவது டி.என்.ஏ பிளாஸ்மிடு தடுப்பு மருந்தாகும்.
  • இந்தத் தடுப்பு மருந்தானது வழக்கமான ஊசிக் குழல் மூலம் செலுத்துவதற்குப் பதிலாக ஊசியற்ற ஒரு சாதனத்தைப் பயன்படுத்திச் செலுத்தப்படும்.
  • அந்தச் சாதனமானது “பார்மாஜெட்“ என அழைக்கப்படும்.
  • சைகோவ் – D மருந்தின் மூன்று தவணைகள் 28 நாட்கள் இடைவெளியில் வழங்கப் படும்.  

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்