இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) ஆனது, டிஜிட்டல் இணைப்புகளுக்கான இந்தியாவின் முதல் சொத்து மதிப்பீட்டுக் கட்டமைப்பை அறிமுகப்படுத்தியது.
டிஜிட்டல் இணைப்புகளுக்கான சொத்துக்களின் மதிப்பீட்டிற்கான கையேடு, அதிவேக இணையத்திற்கான கட்டடங்களின் தயார்நிலையை மதிப்பிடுவதற்கான ஒரு தரத்தை நிர்ணயிக்கிறது.
இந்தியாவில் 80 சதவீதத்திற்கும் மேற்பட்ட கைபேசி இணையத் தரவுகள், 4G மற்றும் 5G சமிஞ்ஞைகள் பெரும்பாலும் பலவீனமடையும் இடங்களில் நுகரப்படுகிறது.
இந்தக் கட்டமைப்பு ஆனது, கம்பி இழை இணைப்பிற்கான தயார்நிலை, கைபேசிப் பயன்பாட்டின் பரவல், அருகலை (வைஃபை|) அணுகல், அகலப் பட்டை இணைய சேவை (பிராட்பேண்ட்) வேகம் மற்றும் பயனர் அனுபவத்தை மதிப்பிடுகிறது.
மின்சாரம் மற்றும் தண்ணீருடன் எண்ணிமச் சேவை இணைப்பை ஓர் அத்தியாவசிய சேவையாக மாற்றுவதை TRAI நோக்கமாகக் கொண்டுள்ளது.