எல்லைச் சாலைகள் அமைப்பானது சோஜிலா கணவாயில் முதல் முறையாக ஜனவரி மாதத்தில் போக்குவரத்தினை மேற்கொள்வதற்கு அனுமதித்துள்ளது.
இது இந்தியாவின் லடாக் ஒன்றியப் பிரதேசப் பகுதியில் உள்ள இமயமலையின் ஒரு உயரமான மலைப் பாதையாகும்.
ஸ்ரீநகர்-சோனாமார்க்-கும்ரி சாலையில் 11643 அடி உயரத்தில் அமைந்துள்ள சோஜிலா கணவாய் ஆனது, காஷ்மீர் பள்ளத்தாக்கிற்கும் லடாக்கிற்கும் இடையே உள்ள ஒரு முக்கியத்துவம் வாய்ந்த பாதையாகும்.
இமயமலைத் தொடரின் மேற்குப் பகுதியில் உள்ள ஸ்ரீநகர் மற்றும் லே ஆகியவற்றுக்கு இடையேயான இந்தக் கணவாய் வழியாக தேசிய நெடுஞ்சாலை 01 ஆனது செல்கிறது.