இந்திய அரசானது நிதி அமைச்சகத்தின் செலவினத் துறையின் கீழ் செயல்படும் பொதுக் கணக்குக் கட்டுப்பாட்டாளர் பதவியின் ஒரு கூடுதல் பொறுப்பினை சோனாலி சிங் என்பவரிடம் வழங்கியுள்ளது.
இவர் 2019 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்திலிருந்து ஒரு கூடுதல் பொதுக் கணக்குக் கட்டுப்பாளராக பணியாற்றி வருகிறார்.
இதற்கு முன்பாக இவர் மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் ஒரு கூடுதல் செயலாளராகவும் பணியாற்றினார்.