TNPSC Thervupettagam

சோன் நதி நீர் ஒப்பந்தம்

September 3 , 2026 10 days 108 0
  • சோன் நதி நீரைப் பகிர்ந்துகொள்வதற்காக பீகார் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இதன் மூலம் சுமார் 25 ஆண்டுகால மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பிரச்சினை தீர்க்கப்பட்டுள்ளது.
  • கங்கையின் வலது கரையில் இணையும் ஒரு முக்கியமான துணை நதியான சோன் நதி அமர்கண்டக்கிற்கு அருகே உள்ள மைகால் மலைப்பகுதியில் உற்பத்தியாகி, இறுதியாக பீகாரில் பாட்னாவிற்கு அருகே கங்கை நதியுடன் கலக்கிறது.
  • இது சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், ஜார்க்கண்ட் மற்றும் பீகார் வழியாகப் பாய்கிறது; ரிஹாந்த், கன்ஹார் மற்றும் வட கோயல் ஆகியவை இதன் முக்கிய துணை நதிகளாகும்.
  • பீகாரின் ரோஹ்தாஸ் மாவட்டத்தில் உள்ள இந்திரபுரி தடுப்பணை (சோன் தடுப்பணை) இந்நதியின் மீதான ஒரு முக்கியமான நீர்ப்பாசனக் கட்டமைப்பாகும். இது 1968 ஆம் ஆண்டில் பயன்பாட்டுக்கு வந்தது.
  • இந்தப் புதிய ஒப்பந்தமானது பீகாரின் போஜ்பூர், பக்சர், ரோஹ்தாஸ், கைமூர், அவுரங்காபாத், அர்வால், கயா மற்றும் பாட்னா ஆகிய பகுதிகளிலும், ஜார்க்கண்டின் பலாமு, கார்வா மற்றும் பிற பகுதிகளிலும் நீர்ப்பாசனம் மற்றும் குடிநீர் தேவைகளுக்கு ஆதரவளிக்கும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்