ஜன் அவுசாதி திவாஸ் (மரபுசார் மருத்துவ தினம்) - மார்ச் 7
March 8 , 2020 1991 days 751 0
மரபுசார் மருந்துகளின் (Generic Medicine) பயன்பாடு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இத்தினமானது அனுசரிக்கப் படுகின்றது.
இது 2019 ஆம் ஆண்டு மார்ச் 07 அன்று தொடங்கப் பட்டது.
பிரதான் மந்திரி ஜன் அவுசாதி பரியோஜனா (Pradhan Mantri Jan Aushadhi Pariyojana - PMBJP) என்ற திட்டமானது 2015 ஆம் ஆண்டு ஜூலை 01 அன்று இந்தியப் பிரதமரால் அறிவிக்கப் பட்டது.
இது இந்திய அரசின் இரசாயனங்கள் மற்றும் உரத்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள மருந்துத் துறையால் தொடங்கப் பட்டுள்ளது.
2020 ஆம் ஆண்டிற்குள் நாட்டில் உள்ள ஒவ்வொரு தொகுதியிலும் குறைந்தது 1 PMBJP கேந்திராவை நிறுவ வேண்டும் என்று அரசாங்கம் இலக்கு நிர்ணயித்துள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ் உயர்தர மருந்துகளின் விலைகளானது சந்தை விலைக்குக் கீழே இருக்கும்படி அரசாங்கத்தால் குறைக்கப் படுகின்றன.
'ஜன் அவுசாதி கடைகள்' அரசாங்கத்தால் அமைக்கப் பட்டுள்ளன. இங்கு மரபுசார் மருந்துகள் கிடைக்கின்றன.
பிற நிறுவன மருந்துகளை விட மரபுசார் மருந்துகள் மிகவும் குறைந்த விலையில் இங்கு கிடைகின்றன.