ஏழு பெருநகரங்களில் உள்ள ஜன் ஔஷதி கேந்திரா மையங்களுக்கான குறைந்தபட்ச தொலைவு விதியை மத்திய அரசு நீக்கியுள்ளது.
அந்தப் பெருநகரங்கள் டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை, பெங்களூரு, ஐதராபாத் மற்றும் அகமதாபாத் ஆகியனவாகும்.
2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட 46 நகரங்களுக்கும் இந்தப் புதிய விதி பொருந்தும்.
இது போன்ற நகரங்களில், ஏற்கனவே அமைந்துள்ள மையங்கள் நிறுவப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்கும் குறைவாக ஆகியிருந்தால் மட்டுமே ஒரு கிலோமீட்டர் தூர விதி பொருந்தும்.
பிரதான் மந்திரி பாரதிய ஜன் ஔஷதி பரியோஜனா (PMBJP) திட்டத்தின் கீழ் உள்ள ஜன் ஔஷதி மையங்கள் மலிவு விலையிலான பொதுப் பயன்பாட்டு மருந்துகளை வழங்குகின்றன.
தற்போது இந்தியா முழுவதும் 11,000க்கும் மேற்பட்ட ஜன் ஔஷதி மையங்கள் இயங்கி வருகின்றன.