இந்தப் பிரச்சாரமானது ஜூலை 1 முதல் செப்டம்பர் 30 வரை நாடு தழுவிய அளவில் நடைபெறும்.
அரசாங்க நலத் திட்டங்களின் கீழ் இன்னும் சலுகைகளைப் பெறாத, தகுதியுள்ள குடி மக்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு அந்தச் சலுகைகளை வழங்குவதே இதன் நோக்கமாகும்.
இதில்
பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா,
பிரதான் மந்திரி சுரக்சா பீமா யோஜனா,
அடல் ஓய்வூதிய யோஜனா, மற்றும் ஜன் தன் யோஜனா ஆகியவை அடங்கும்.
இந்தப் பிரச்சாரத்தில் ஜன் தன் கணக்குகளுக்கான KYC (உங்கள் வாடிக்கையாளரை அறிந்து கொள்ளுங்கள்) கணக்கைப் புதுப்பித்தல், புதிய கணக்குகளைத் திறப்பது மற்றும் எண்ணிம மோசடி குறித்த ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துதல் ஆகியவையும் அடங்கும்.